இந்திய படைகளையே தோற்கடித்த புலிகளை நமது இராணுவம் தோற்கடித்தது ஜனாதிபதி- பெருமிதம்.

Sunday, May 21st, 2017

இலங்கை வந்த இந்திய அமைதி காக்கும் படை விடுதலைப்புலிகளை தோற்கடிப் பதற்கான தனது முயற்சியில் தோல்வி அடைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கான  பல முயற்சிகளில்  தோல்வியடைந்த நிலையிலேயே இலங்கை இந்தியாவின் உதவியை நாட வேண்டி யிருந்தது.

ஆனால் இந்திய அமைதி காக்கும் படை கூட விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் தோல்வியுற்றதாகவும், இறுதியில் நமது இராணுவம் மே 2009 ல் விடுதலைப்புலிகளை தோற்கடித்தது என்றும் அவர் பெருமையுடன்  கூறினார்.

விடுதலைப்புலிகளுடனான யுத்த வேற்றியின்   எட்டாவது  ஆண்டு நிகழ்வுகள் கொழும்பு  கோட்டேயிலுள்ள யுத்த நினைவு ஸ்தூபியில்   இடம்பெற்ற போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன அவர்களே மேற்கண்ட வாறு தெரவித்தார்.

இதுவரை யுத்தநினைவு தினம் என்கின்ற பெயரில் அனுஸ்டிக்கபட்ட மே 19 ம் திகதியை  யுத்தத்தில் இறந்த அனைவரையும்  நினைவுகூரும் வகையில் போர் வீரர்கள் தினம் என மாற்றுவதற்கு நல்லாட்சி அரசு தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி அங்கே தெரிவித்தார்.

.

Related posts: