மாணவியை வீடு புகுந்து கடத்திச் செல்ல முயற்சி முறியடிப்பு – இமையாணனில் சம்பவம்!

Thursday, July 20th, 2017

வீடு புகுந்து மாணவியைக் கடந்த முயன்ற குழுவை ஊர் இளைஞர்கள் மடக்கிப் பிடித்து அவர்களை நன்றாகக் கவனித்த பின்னர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று .நேற்று நடந்துள்ளது.

இமையாணன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பதின்ம வயதுடைய மாணவி ஒருவரைத் திருமணம் செய்வேன் என்று கூறி இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.பெற்றோர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்தனர். இருவரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

மாணவியின் வயதை அடிப்படையாகக் கொண்டு இருவரின் சம்மதத்துடன் பிரிந்து செல்ல பொலிஸார் அனுமதித்தனர். நேற்று அதிகாலை 12 மணியளவில் ஹயஸ் ரக வாகனத்தில் வந்த பெண்கள் இருவர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் இமையாணன் பகுதியில் உள்ள வீடொன்றின் சுற்றாடலில் உள்ள மின் விளக்குகளை அணைத்து வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்தனா்.

அவா்கள் வீட்டிலிருந்த வயோதிபப் பெண்ணைத் தாக்கினர். அங்கிருந்த மாணவியைக் கடத்த முயற்சி செய்தனர். அதனால் வீட்­டில் இருந்தோர் அபயக் குரல் எழுப்பினா். அயலிலுள்ள இளைஞர்கள் ஒன்று கூடியதை அடுத்து தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அவர்களைச் சுற்றி வளைந்த இளைஞர்கள் அவர்களில் இருவரை மடக்கிப் பிடித்தனர். ஏனையவர்கள் ஹயஸ் வாகனத்தில் தப்பிச் செல்ல முயற்சித்த போது அவா்களையும் பிடித்தனர். அவர்களுக்கு முறையான கவனிப்பு வழங்கிய பின்னர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் தப்பியோடி தலை மறைவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மடக்கிப் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது

Related posts:


கொவிட் பரவல் முற்றாக நீக்கவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்து தமது நாளாந்த கடமைகளை முன்னெடுக்க வேண்...
மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் - அம...
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு பொதுமக்களுக்கு அ...