கொவிட் பரவல் முற்றாக நீக்கவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்து தமது நாளாந்த கடமைகளை முன்னெடுக்க வேண்டும் – பொலிசார் எச்சரிக்கை!

Monday, November 8th, 2021

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்ட 421 பேருந்துகள் மற்றும் 60 சொகுசு பேருந்துகளின் சாரதிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில் பொதுமக்கள் பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது..

இதேநேரம் சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்பட்ட 495 வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முன்பதாக நாட்டில் ஒப்பீட்டளவில் கொவிட் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளது.

எனினும் கொவிட் பரவல் முற்றாக நீக்கப்படவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்து தமது நாளாந்த கடமைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொலிசார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து சேவையை வழங்க துரித நடவடிக்கை - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தில...
வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றக்கூடிய அனைத்து சரத்துக்களும் 21 ஆவது திருத்தத்தில் இணைப்பு - எதிர்க்...
ஒக்டோபர் 15 ஆம் திகதி ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறும் – பரீட்சை திணைக்களம...