ஒக்டோபர் 15 ஆம் திகதி ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறும் – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Thursday, June 15th, 2023

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இன்று முதல் எதிர்வரும் ஜுலை மாதம் 06 ஆம் திகதி வரை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், 40 பாடவிதானங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள, 39 மத்திய நிலையங்களில், இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக, பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசித சமரகோன் தெரிவித்துள்ளார்.

இதற்காக, 37 அரச பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன. எனினும், எந்தவொரு பாடசாலையும் முழுமையாக மூடப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 5,500 பட்டதாரி ஆசிரியர்கள், எதிர்காலத்தில், ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

35 வயதுக்கு மேற்படாத பட்டதாரிகளே, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாளைய தினம் 7,500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: