2000 மெகா வோட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சாரசபை தீவிரம்!

Sunday, April 3rd, 2016

எதிர்காலத்தில் பாரிய மின்சார விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தடுக்கும் முகமாக அதிகளவான மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சாரசபை தயாராகிறதாக தெரிகின்றது.

இதன்படி தற்போது கொள்வனவு செய்யப்பட்டு வரும் 2300 மெகா வோட்ஸ் மின்சாரத்தை 4600 மெகா வோட்ஸாக அதிகரிக்க சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான பணிப்புரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மின்சாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் மின்சார தேவை கடந்த மூன்று மாதங்கள் பாரியளவில் அதிகரித்திருந்ததாக இலங்கை மின்சாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

சாதாரணமாக 4 முதல் 5வீத மின்சார தேவையே அவசியம் என்று கருதப்பட்டது. எனினும் கடந்த மூன்று மாதங்களில் அது 7 முதல் 8 வீதம் வரை அதிகரித்திருந்தாக சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts:


முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக...
பாடசாலைகள் நீண்டகாலமாகத் திறக்கப்படாமையினால் இலங்கையில் கல்வி இழப்பு, மனித மூலதன வீழ்ச்சி, சமூகம்சார...
இலங்கை ஆடை ஏற்றுமதியில் 4.88% வருடாந்த வளர்ச்சிப் பதிவு - ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!