மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் அவசியம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி!

Saturday, June 2nd, 2018

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் அவசியம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீபிகா உடகம கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச தரப்படுத்தலில் ஏ தரத்தை பெற்றுள்ளமை குறித்து  மகிழ்ச்சி ஆணைக்குழுவின் தலைவி தீபிகா இது அரசியல் யாப்பின் மீதான 19வது திருத்தத்தை நிறைவேற்றி அதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்துமாறு கோரிய இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றியென குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை மக்களுக்கு நியாயமான பாதுகாப்பை வழங்க முடிந்தது. இந்த ஆணைக்குழுவிற்கு வருடந்தோறும் ஒன்பது ஆயிரத்திற்கும் பத்தாயிரத்திற்கும் இடைப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இவற்றை விசாரிப்பதற்கு போதிய ஆளணி வளம் இருக்கவில்லை என்றார். ஆனால் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாநாட்டில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில்  மனித உரிமைகளை மீறும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக மனித உரிமைகளுக்கு அரச பாதுகாப்பை வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றார்.

Related posts: