மக்களை ஏமாற்றும் தந்திரமே எரிபொருள் விலைச் சூத்திரம் – ஜே.வி.பி !

Wednesday, October 24th, 2018

கூட்டாட்சி அரசின் எரிபொருள் விலைச் சூத்திரம் பொது மக்கள் மீது எரிபொருள் சுமையை சுமத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு தந்திரமான உத்தியே என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

இலங்கைக்கு கொண்டுவரும் எரிபொருளில் இருந்து பல்வேறு வகையான வரிகளை அரசு அறவிடுகின்றது. கூட்டாச்சி அரசு அறிமுகம் செய்துள்ள புதிய எரிபொருள் சூத்திரத்தில் அவ்வாறான எந்தவொரு வரியிலும் கை வைக்காமல் எரிபொருள் விலையை தீர்மானிக்க அரசு முயற்சிக்கின்றது.

இது எரிபொருள் விலையில் குறைவை ஏற்படுத்தாது எனவும், மாறாக மக்கள் மீது சுமையையே தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அரசு மக்களுக்கு எரிபொருள் விலையில் நலனை நாடுவதாக இருந்திருந்தால், எரிபொருளுக்காக அறிவிடும் வரிகளையே முதலில் குறைக்க முன்வர வேண்டும் என்றார்.

Related posts:


நாளையதினம் பல்கலைக்கழகங்கள் ஆரம்பித்தாலும் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படமாட்டாது - உயர்க் ...
எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எது...
பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சிச் செயல்முறையை மேம்படுத்துதல் குறித்து...