போலீஸ் தாக்குதலை கண்டிக்கும் ஜே.வி.பி

Saturday, May 20th, 2017

பல்கலைக்கழக மாணவர்களினால்  நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட போராட்டத்தின் மீது கண்ணீர்புகைப் பிரயோகம் தண்ணீர் பிரயோகம் போன்றன மேற்கொள்ளப் பட்டமைக்கு   மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கண்டனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் மாநாடு ஒன்றில்  உரையாற்றிய ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அரசாங்கத்துடனோ அல்லது பொலிஸுடனோ சண்டையில் ஈடுபடவில்லை எனவும், மிகவும் நியாயமான கோரிக்கைக்கு அமைதியான எதிர்ப்பு ஒன்றை மட்டுமே வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம் அவர்களை குற்றவாளிகளாகக் கருதி மனிதாபிமானமற்ற  முறையில் தாக்கியுள்ளது. இதனால் சுமார் 20 மாணவர்கள் காயமடைந்ததுடன் மேலும் பத்து பேர் கைது செயப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்னர். நியாயமான முறையில் நடத்தபட்ட ஒரு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தபட்ட அரசாங்கத்தின் தாக்குதலை நாம் கண்டிக்கிறோம், என்றும் அவர் கூறினார்.கைது செய்யப்பட்ட மாணவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

பெரும் பணம் சம்பாதிக்கும் சயிற்றம் திட்டத்திற்கு எதிராக  ஜே.வி.பி உட்பட பல அரசியல் கட்சிகள்,தொழிற்சங்கங்கள், மருத்துவர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் என அனைவரும் உட்பட எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி  அரசாங்கம் SAIDM ஐ பாதுகாக்க முயற்சிப்பதுடன் சட்டத்தை பயன்படுத்தி பொது கருத்தை நசுக்குகிறத எனவும் தெரவித்தார் டில்வின் சில்வா,

SAITM உடன் எங்களுக்கு எந்த  பிரச்சினையும்  இல்லை. அரசு வழங்கும் இலவச  கல்வியை  விற்கும் நோக்குடன் ஆரம்பிக்கபட்ட இந்த நிறுவனத்தை உடன் மூடுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் பொதுமக்கள் கருத்தை பல்வேறு வழிகளில் நசுக்குவதற்கும், மக்களுக்கு எதிரான இடைக்கால உத்தரவுகளை எடுத்து வருவதையும் நேரடியாகக் கண்டித்த ஜே.வி.பியின்  பொதுச் செயலாளர்  இது நாட்டின் சட்ட விதிகள் மீறபடுகின்றன  என்பதையே தெளிவாக காட்டுகிறது எனவும் கூரறினார்.

அதிகாரிகள் பொதுமக்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் அரசாங்கம்  பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை இணக்கமான  முறையில் தீர்க்க முன் வரவேண்டும் எனவும் அவர் தெரவித்தார்.

Related posts: