திறைசேரியால் யதார்த்தமற்ற முறையில் அதிக வருவாய் மதிப்பீடுகள் நாடாளுமன்றுக்கு காட்டப்பட்டுள்ளன – மத்திய வங்கி ஆளுநர் குற்றச்சாட்டு!

Wednesday, May 25th, 2022

தவறான மதிப்பீடுகளை சமர்ப்பித்து திறைசேரி, நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக நாடாளுமன்ற பொது நிதி தொடர்பான குழுவிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

யதார்த்தமற்ற முறையில் அதிக வருவாய் மதிப்பீடுகள் நாடாளுமன்றுக்கு காட்டப்பட்டுள்ளன. இதனடிப்படையிலேயே குறைக்க முடியாத செலவீனங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.

இது உண்மைக்குப் புறம்பானது என்று தெரிந்தும், தவறான மதிப்பீடுகளைச் சமர்ப்பித்து நாடாளுமன்றம், தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கூறப்பட்டபடி, வருமானம் வெளிப்படையாக வரவில்லை. பணம் அச்சிடுதல் அல்லது ஏனைய நிதி பல்வேறு வழிகளில் இந்த வருவாய் மதிப்பீடு காட்டப்பட்டுள்ளமையால், செலவீனங்களுக்கு ஏற்ப கடனை அதிகரிக்கவேண்டியிருந்தது. இதன் காரணமாகவே கடன் பொறி உருவானது என்று நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக மாத்திரம் இலங்கைக்கு சுமார் 600 அல்லது 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மின்சார சபை, எரிவாயு நிறுவனம் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடம் டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு போதுமான ரூபாய்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

“மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்” - தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும்...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 7 ஆயிரம் பேர் மீது வழக்குத் தாக்கல் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோக...
காங்கேசன்துறைக்கு இன்றுமுதல் முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை முன்னெடு...