பொலிஸ் சான்றிதழ்கள் இனி  இணயத்திலும் பெற்றுக்கொள்ளலாம்!

Friday, May 5th, 2017

இலங்கை  பொலிஸ் திணைகளத்தின்  சான்றிதழ்களை  இணயத்தளம் வழியாகவும் பெறுக்கொள்வதற்கான வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செலவதற்கான மற்றும் வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு வழங்கப்படும் நற் சான்றிதள்கள் உட்பட அனைத்து பொலிஸ் திணைகள சான்றிதழ்களையும்  இனி இணைய வளியாகப் பெற்றுக் கொள்ளலாம். பொலிஸ் திணைகளத்திநால்  கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட  இந்த  இணையத் தளத்திற்கு தற்போது நாளொன்றுக்கு சுமார் 150 விண்ணப்பங்கள்  உள்ளூர் மக்களிடமிருந்தும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 300 விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் திணைகள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கான  கட்டணத்தை கடன் அட்டைகள் மூலமோ அல்லது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தியோ செலுத்தலாம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நிலை தொடர்பிலும்  அறிந்து கொளவும் முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுளது. இலங்கை பொலிஸ் திணைகளத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk  மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்க உத்தியோகபூர்வ இணையத்தளமான www.gov.lk  ஆகியவற்றின் ஊடாக இந்த சேவை கிடைக்கின்றது.

Related posts: