பொலிஸ் திணைக்கள பதவி உயர்வுக்கான புதிய நடைமுறை அமுலுக்கு வந்தது!
Sunday, September 17th, 2017
இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வழிகாட்டலுக்கு ஏற்ப பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுக்கான புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.
தற்போதைய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 3,500 பேருக்கு இதன் கீழ் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மனதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மேலும் 2,500 பேருக்கான பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் இவ்வாறாக 6,000 பேருக்கான பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக பொலிசாரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவி செய்வதன் மூலமாக அவர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை பெற்றுக் கொடுப்பதே பொலிஸ் ஆணைக்குழுவின் நோக்கமாகும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மனதுங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்
Related posts:
கால்நடைகளின் குடிநீரைப் பூர்த்தி செய்ய தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்படும் - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...
மீண்டும் தாக்குதல் நடைபெறலாம் - பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!
இலங்கையில் 2 ஆயிரத்து 773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் - தேசிய டெங்கு கட்ட...
|
|
|


