பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பற்றாக்குறை!

Monday, September 4th, 2017

இலங்கைப் பொலிஸ் திணைக்களம் 1,500 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பணியில் சேர்க்க அண்மையில் பரீட்சைகளை நடத்தியதுடன் அதில் வெறும் 120 பேர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் 24,000 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஓய்வுபெறவுள்ளனர். புதிதாக பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பணியில் இணைத்து கொள்ள முடியாது போனால், பொலிஸ் திணைக்களம் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் 25 ஆண்டுகளின் பின்னரே சார்ஜன்ட் தரத்திற்கு உயர்த்தப்படுவார். இதனையடுத்து 15 வருடங்களின் பின்னர் சார்ஜன்ட் உப பொலிஸ் பரிசோதகர் பதவி தரத்திற்கு உயர்த்தப்படுவார்.

இந்த நிலைமை காரணமாக இளைஞர்கள் பொலிஸ் துறையில் இணையவதை பொரும்பாலும் விரும்புவதில்லை என்பது கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் - இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு!
நினைத்தவுடன் எவரையும் கைது செய்யும் அதிகாரத்தை எவரிடமும் நான் ஒப்படைக்கவில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு...
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுமார் நூறு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் - பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

சட்டவிரோத செயல்கள் பாரிய அளவில் இடம்பெறுமாயின் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் சீருடை அணிவதில் வெட்கப்பட...
500 பேருக்கு மேல் பி.சி.ஆர் பரிசோதனை - முல்லையில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்படுகின்றன - பிரா...
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி இலங்கை ...