பேருந்து கட்டணங்கள் தொடர்பில் குழப்பநிலை!

Monday, May 28th, 2018

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்து பேருந்துக் கட்டணங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் 12.56 வீதத்தினால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டும் கட்டணங்கள் தொடர்பில் குழப்பநிலைகளே தொடர்கின்றன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

அந்தவகையில் இதுவரைகாலமும் காணப்பட்ட ஒவ்வொரு தரிப்பிடங்களுக்கிடையிலான பாய்ச்சல் கோட்டு மூலமான கட்டணங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் சில பிரதேச ரீதியான கட்டணங்கள் அதிகரித்தாலும் முன் இருந்த கட்டணங்களை விடக் குறைவடைய இருப்பதாகவும் மேலும் சில பிரதேச ரீதியான கட்டணங்கள் அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் உடனடியாக இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன.

எனினும் இது தொடர்பில் தனியார் சிற்றூர்திச் சங்கத்தினருக்கு இந்த நடைமுறை தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் கிடைக்கப்பெறவில் என்றும் இந்த நடைமுறை கொண்டுவரும் பட்சத்தில் தனியார் உரிமையாளர்களுக்கும் நஸ்டம் ஏற்படவே வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் இந்தக் கட்டண குழப்ப நிலையால் மக்கள் குழப்பமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

லம்ப்டா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்...
குறுந்தகவல் மூலமாக இந்து ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்...
ஓய்வுபெற்ற ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம் - நிதி இராஜாங்...