பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு?
Tuesday, May 1st, 2018
தனியார் பேருந்து பயணக்கட்டணங்களை எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் இரண்டு பிரதான தனியார் பேருந்து சங்கங்களான அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்ஆகிய இரண்டும் இதனைத் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்தமை, இலங்கை நாணயத்துக்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு போன்றன பேருந்து சேவையை நடத்திச் செல்வதில்நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் ஜுலை மாதம் முதல் பேருந்து கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த நேரும் என்று அந்த சங்கங்களின் பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்த வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் புதிய கட்டண கொள்கை உருவாக்கப்பட்டதன் பின்னரே தீர்மானிக்கப்படும் என்று தேசியபோக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|
|


