தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம நியமனம்!

Tuesday, October 31st, 2023

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரவினால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் சபையுடன் அமைச்சர் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு அரச சேவையில் இணைந்துகொண்ட விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தற்போது தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் சிரேஷ்ட உடலியல் நிபுணராக கடமையாற்றி வருகின்றார்.

போலியான ஆவணங்களை பயன்படுத்தி 22,500 immunoglobulin தடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் குறித்த நடவடிக்கைக்கு உதவிய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தடுப்பூசி குப்பிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானக பெர்னாண்டோ, அதனை கொள்முதல் செய்த மருந்து வழங்கள் பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் விஜித் குணசேகர ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

130 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடி இடம்பெற்றுள்ளதாக குறித்த அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தகவல் முகாமைத்துவ முறைமை தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு பணிப்புரை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சு அதிக எண்ணிக்கையிலான தகவல் மேலாண்மை நீட்டங்களை நிறுவியுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் 723 வைத்தியசாலைகளில் ஸ்வஸ்த தகவல் முகாமைத்துவ திட்டம் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் 436 வைத்தியசாலைகளில் தகவல் முகாமைத்துவ திட்டத்தினை நிறுவுவதற்கான காலவரையறையை தயாரிக்குமாறு உபகுழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: