பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் : இலங்கையிடம் வலியுறுத்தல்!

Friday, May 5th, 2017

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாதுகாப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இலங்கை இராணுவக் கட்டளைத் தளபதி கிரிஷாந் டி சில்வா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை இஸ்லாமாபாத்தில் சந்தித்தபோது இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், அதனை மேலும் அதிகரிக்க வேண்டும். இதன் ஊடாக பிராந்திய ரீதியாக சமாதானத்தையும், நிலையான தன்மையையும் ஏற்படுத்த முடியும் என பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

Related posts: