பாதாள உலக கும்பலை கைது செய்ய இலங்கை – இந்தியா இணைவு!
 Tuesday, January 23rd, 2018
        
                    Tuesday, January 23rd, 2018
            
இலங்கையிலிருந்த இந்தியாவுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக வாழும் பாதாள உலக குழவைச் சேர்ந்தவர்களைக் கைது செயயும் செயற்திட்டம் ஒன்று இந்திய மத்திய புலனாய்வு பிரிவினருடன் இணைந்த விசேட செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த செயற்திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டம் இந்திய மத்திய புலனாய்வ அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறை மது ஒழிப்பு பிரிவின் தகவல்களின்படி ஐந்து முக்கிய குற்றவாளிகள் இந்தியாவில் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு சர்வதேச காவல்துறை ஊடாக சிவப்பு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அங்கொட லொக்க மற்றும் லடியா எனும் யெயர்களை உடைய பாதாள உலகத்தவர்கள் சென்னையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களும் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவருக்கும் பிணை பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் இருந்து இருவர் இந்தியா சென்றுள்ளதாகவும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் குறித்த பாதாள உலகத்தினர் தங்கியிருக்கும் இடங்கள் அறியப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        