பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை கணிப்பீடு!

Wednesday, March 21st, 2018

பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவில் காணப்படுகின்றது.

பாடசாலை செல்லாத மாணவர்களில்  குறைவான எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டமாக யாழ்.மாவட்டம் காணப்படுவதாக ஆய்வின் மூலம்கண்டறியப்பட்டுள்ளது.

தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் நாட்டில் பாடசாலை கல்வியை கற்க வேண்டிய வயதைகொண்ட பிள்ளைகளில் 3.4 சதவீதமான பிள்ளைகள் ஒருநாளேனும் பாடசாலைக்கு செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு 5 – 20 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டது. இந்த வயதிற்குட்பட்ட 95 சதவீதமானோர் பாடசாலைகல்வியை தொடர்வதாக கண்டறியப்பட்டுள்ளது

Related posts: