ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பில் இலங்கையில் பரிசீலனை!

Monday, February 1st, 2021

கொரோனா வைரசிற்கு எதிராக ரஷ்யாவினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஸ்புட்னிக் மற்றும் இந்தியாவினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பாரத் பயோடெக் தடுப்பூசிகளை நாட்டினுள் அவசர பயன்பாட்டிற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக ஒளடத ஒழுங்குமுறை அதிகாரசபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் குறித்த தடுப்பூசிகளை நாட்டினுள் பயன்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரசபையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ஏற்கனவே ஒளடத ஒழுங்குமுறை அதிகாரசபையிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒக்ஸ்போட் எஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட முறைமைகளின் கீழ் ஸ்புட்னிக் மற்றும் பாரத் பயோடெக் தடுப்பூசிகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுமை குறநிப்பிடத்தக்கது.

000

Related posts: