பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா முனைப்புடன் செயற்படும் – இந்திய வெளியுறவு அமைச்சர்!

இலங்கையின் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சர்வதேச மாநாடு ஒன்றில் கருத்துரைத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாதத்தின் தன்மையை அனைவருக்கும் உணர்த்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இந்திய காஷ்மீரில் படையினர் தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கஸகஸ்தானில் நேற்று நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தின்போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இந்தநிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா முனைப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
விமானங்களில் கத்திகளை எடுத்துச் செல்ல அனுமதி!
கூட்டமைப்பால்தான் மாகாணசபையில் குழப்பம் - ஆளுநர்!
பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் - வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வரவேற்பு!
|
|