4,033 வழக்குகள் உயர் நீதிமன்றில் தற்போது நிலுவையில்!

Monday, July 23rd, 2018

உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளில் 2017 ஆம் ஆண்டில் 1,350 வழக்குகளுக்கான விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வருட இறுதியில் 4,033 வழக்குகள் விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் நிலுவையில் இருந்ததாகவும் உயர் நீதிமன்ற பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் இறுதியில் உயர் நீதிமன்றத்தில் 3,566 வழக்குகள் நிலுவையிலிருந்ததாகவும் 2017 ஆம் ஆண்டில் புதிதாக மேலும் 1,817 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் மொத்தம் 5,383 வழக்குகளில் 1,350 வழக்குகளுக்கான தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் 2017 இறுதியில் அல்லது 2018 ஆரம்பத்தில் மொத்தம் 4,033 வழக்குகள் விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாமலோ அல்லது தீர்ப்பு வழங்கப்படாமலோ நிலுவையில் இருந்ததாக உயர் நீதிமன்ற பதிவாளர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு 2018 ஜனவரியில் நிலுவையிலிருந்து 4,033 வழக்குகளில் கடந்த அரையாண்டு காலத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுபற்றிய பிந்திய தகவல்களை உயர் நீதிமன்ற பதிவாளர் திணைக்களம் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts: