நிதி நிறுவனங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான நாடளாவிய செயற்திட்டம் !

Sunday, October 22nd, 2017

தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து முறையற்ற விதத்தில் கடன்களைப் பெற்றுக்கொண்டதன் காரணமாக அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள கிராம மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான நாடளாவிய செயற்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும்.

இதற்கான ஆலோசனை 2018 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையில் முன்வைக்கப்படும்

வறுமையை இல்லாதொழிக்கும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்ந நிகழ்வில் கலந்தகொண்ட உரையாற்றகையிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயங்களை தெரிவித்தார்.

பலமான, கௌரவமான பொருளாதாரத்தை உடைய பேண்தகு பொருளாதாரத்திட்டம் இலங்கை தேசத்தில் சகல வகையிலும் வறுமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் குறிக்கோளிற்கு அமைய அமுல்படுத்தப்படும் முக்கியமான செயற்திட்டமாக கிராமசக்தி செயற்திட்டம் காணப்படுகின்றது.

Related posts: