நான்கு பேருக்கு கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் மர்மம்: ஆபத்து என எச்சரிக்கை செய்கிறது இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களில் நால்வருக்கு எவ்வாறு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னமும் உறுதி செய்ய முடியவில்லை என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சமூகத்தில் கொரோனா நோய் அறிகுறிகள் இல்லாத பலர் இருக்க கூடும் எனவும் சங்கத்தின் உப தலைவர் சாரத கண்ணங்கர அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள், மக்களுடன் கலந்துள்ளமையினால் அதிக ஆபத்தான நிலை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றமையினால் மக்கள் முன்னரை விடவும் மிகவும் சுகாதார பழக்கங்களை கடைபிடிக்க வேண்டிய கால எல்லைக்குள் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
பயணத்தை தடுக்க முனைந்தார்கள் - ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு!
அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க தீர்மானம் - அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமை...
துப்பாக்கிகளை ஒப்படைக்க மார்ச் 15 வரை அவகாசம் - அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையளிக்க முடியும் - ...
|
|