நாடு முழுவதும் கடும் வறட்சி – 2 இலட்சத்து 10 ஆயிரத்து 798 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Saturday, August 19th, 2023

வறட்சியான காலநிலையில், 15 மாவட்டங்களில் 60 ஆயிரத்து 990 குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்து 10 ஆயிரத்து 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலையில், வடக்கு மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதில் குறிப்பாக வடமாகாணத்தில் இதுவரையில், 23 ஆயிரத்து 603 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 287 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கிழக்கு மாகாணத்தில் 18 ஆயிரத்து 136 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிலவும் வறட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு 69 ஆயிரத்து 220 வாடிக்கையாளர் நீர் இணைப்புகளுக்கு கண்காணிப்பு அமைப்பின் கீழ் நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு முறையின் கீழ் நீர் விநியோகிக்கப்படும் போது மற்றும் தேவை அதிகரிக்கும் போது குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

வறண்ட காலநிலை தொடரும் பட்சத்தில், தற்போது சிறந்த நீர் வளம் உள்ள இடங்களும் பிரச்சினைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழிர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காப்பு மருத்துவ உபகரணங்...
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைவோம் - யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் த...
எதிர்வரும் 15 ஆம் திகத முதல் அமுலுக்கு வருகின்றது ஊழல் ஒழிப்பு சட்டம் – வெளியானது வர்த்தமானி அறிவித்...