வெற்றி அளிக்குமா பிரதமரின் சீன விஜயம் !

Saturday, May 13th, 2017

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று சீன செல்லும்  பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இந்த பயணத்தின் போது, ஹம்பாந்தோட்டை துறைமுக மற்றும் முதலீட்டு வலயத்தை சீனாவுக்கு வழங்குவதற்கான உடன்படிக்கைகளை இறுதி செய்வார் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவை ஒப்புதல் இன்னமும் வழங்கப் படவில்லை எனத் தேர்விக்கப்படுகிறது,  இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சரவை கூட்டத்தில், துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமாரவிராமா இறுதி அறிக்கையை அமைச்சரவை ஒப்புதலுக்காக சமர்பித் திருந்தார்,  ஆனால் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்துமாறு  ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன அவர்கள் அமைச்சரவைக்கு தெரிவித்தார் என அறிய முடிகிறது.

99 வருட குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகதை சீனாவிற்கு  வழங்குவதை ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சி  எதிர்த்த நிலையில்  இப்போது குத்தகை காலத்தை சீனா 70 ஆண்டு களாக  குறைக்க ஒப்பு கொண்டுள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் தொடர்பான  ஜனாதிபதியின் நிலைப் பாடானது இந்த விடயத்தில் ஒர் உடன்பாடு ஏற்படுவதை மேலும் தாமதப்படுத்தலாம் எனக் கூறப் படுகிறது. அமைச்சரவை ஒப்புதலுக்காக  மலிக் சமாரவிரம சமர்ப்பித்த  இறுதி அறிக்கையைப் படித்து இறுதி முடிவெடுக்க  மேலும் கால அவகாசம் தேவை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாராம்.
குத்தகைக் காலத்தை 70 ஆண்டுகளாக  குறைத்த புதிய   உடன்படிக்கை இலங்கை  பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் போது இறுதி வடிவம் எட்டப்படும் என்று சீன தரப்பில்  எதிர்பார்க்கப்படுகிறதாம்.

இலங்கை அரசாங்கத்தின் தொடர் தாமதமானது இந்த உத்தேச ஒப்பந்தத்தில் இருந்து சீனா பின்வாங்கும் நிலைமையையும்  ஏற்படுத்தலாம் எனவும் தேரிவிக்கப் படுகிறது.

அப்படி நடந்தால் இந்த ஒப்பந்தம் மூலம் நாட்டிற்குள் சுழல இருக்கும் பணம் நிறுத்தப் பட்டு அரசாங்கம் மிகப் பெரும் பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளாகலாம் எனவும்  பொருளியல் ஆய்வாளர்கள் கருத் து வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது சீன முதலீடுகளிலேயே பெருமளவில்  தங்கி நிற்கிறது. இந்த நிலையில்   ஐ.தே.க. க்கும் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கும் இடையிலான கருத்து முரன்பாட்டால்  சீனா பின்வாங்கினால், அது மறைமுகமாக அரசாங்கத்தையே  பாதிக்கும் எனவும் சுட்டிக் கட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, பிரதமரின் சீன சுற்றுப்பயணமானது வெற்றி அளிக்குமா என்பது கேள்விக் குறியே எனவும் தெரிவிக்கப்  பட்டுள்ளது.

Related posts: