தொழிலாளர்  சேமலாப நிதி வரிவிதிப்புக்கு  தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு!

Friday, April 28th, 2017

தொழிலார்களின் சேமலாப நிதிக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட உள்ளதாக வெளியான அதிர்ச்சியூட்டும் செய்திகள்  தொடர்பில்  ஆளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  கூட்டரசங்கமும் ஒன்றிணைந்த எதிர்கட்சியும்  தமது நிலைப்பாட்டை தெளிவாக வெளிபடுத்த வேண்டும் என இலங்கை வங்கி உழியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான  ருசிறிபால தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அனைத்து தனியார்துறை ஊழியர்களும் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளதால் அரசங்கம் தனது தெளிவான நிலைப்பாட்டை உடன் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்த தென்னக்கோன்  அனைத்து அரசியல் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் வரும் மே தினத்தில் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொழிலார்களின் சேமலாப நிதியில்  14 சதவீதத்தை நேரடி வரியாகவும்  14 சதவீததை சேமிப்பு  வரியாகவும் அறவிட  அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்க வாதியும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க அவர்களும் கடந்த வாரம் ஐலன்ட் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை முறியடிக்க அணைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்படும் எனவும்  சமரசிங்க தெரிவித்தார்.

இந்த மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் ஓய்வூதியங்களுக்கு தகுதியற்ற தனியார் துறைத் தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பெற்றுக் கொள்ளும்  இந்த சேமலாப நிதிக்கு  வரி அறவிடப் படுமானால் மிகுதிப் பணத்தில் எப்படி அவர்கள் தமது வாழ்வை நடத்த முடியும் எனவும்  தென்னாகோன் மற்றும் சமரசிங்க ஆகிய இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொழிற்சங்கங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் முன்னைய அரசாங்கங்களும் தொழிலார்களின் வருங்கால வைப்பு நிதியத்தை  நிர்வகிக்க ஒரு தெளிவான மூலோபாயம் கொண்டிருக்கவில்லை எனவும் தென்னகோன் குற்றம் சுமத்தினார். வெளி நாடுகளில் பெரும் நிதிகளில் இயங்கும் தனியார் துறை நிறுவனங்களில் நிறுவனகளின் பங்களிப்புடன்  தோழிலாளர்களுக்கு அதிக பட்ச நிவாரணம் வழங்கப் படுவதை அரசாங்கமும் எதிர் கட்சிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் தென்னகோன் வலியுறுத்தினார்.

கூட்டு எதிர்க்கட்சிகளின் முகியஸ்தர் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனஇஅவர்களும்  பணியாளர் வருங்கால வைப்பு நிதியத்திற்க்கு  வரிவிதிக்க முன்மொழியப்பட்ட முயற்சியினை  எதிர்த்து கருத்து  வெளியிட்டுள்ளார்.

Related posts:

கிளிநொச்சியில் 3389 கடற்றொழிலாளர்கள் பல்வேறு செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர் - பூநகரி கூட்டுறவ...
போக்குவரத்து அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு!
எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் பய...