மத்தியவங்கி ஆளுனரைச் சாடிய நிதி அமைச்சர் அமைச்சரவை உப கமிட்டியில் சூடான வாக்குவாதம்

Saturday, May 6th, 2017

மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி  அவர்கட்கும்  நிதி அமைச்சர்  ரவி கரருணநாயக்கவிற்கும் இடையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை உப கமிட்டிக் கூட்டத்தின்  போது போது கடுமையான வாதப் பிரதி வாதங்கள் இடம் பெற்றதாக கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடன் வழங்கல் ,வட்டி விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதார  நிலைமை போன்ற விடயங்கள் தொடர்பில் நேற்றைய தினம் ஆராய்ந்து கொண்டிருந்த போதே இருவருக்கும் இடையில் கடுமையான தர்க்கம் இடம் பெற்றதாகவும் ஒரு கட்டத்தில் மத்திய வங்கி ஆளுனர் இரட்டை வேடம் போடுவதாக நிதி அமைச்சர் குற்றம் சாட்டினார் எனவும் அந்த செய்தியில் தேரிவிக்கப் பட்டுள்ளது .

 பிரதம மந்திரி ரணில் விகிரமசிங்ககவும்  ஆர்வத்துடன்  கவனித்துக் கொண்டிருந்தத இந்த சர்ச்சையின் போது  ஆளுநரரின்  செயல்பாடுகள் தொடர்பில் பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என நிதி அமைச்சர் கேள்வி எழுப்பியதகவும்  அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மற்றொரு அமைச்சர் தமக்கு தேரிவிததாக அந்த பத்திரிகை தெரரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பல செயல்பாடுகள் ஆளுநரின் கட்டுப்பாடு இன்றி இடம்பெறுவதாக பல அமைச்சர்கள் பிரதமரிடம் தேரிவித்துள்ளனர், இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் வேகமாக சரிந்து கொண்டிருகிறது என்பதையும்  அவர்கள் பிரதமரிடம் சுட்டிக் கா ட்டினர் எனவும் நிதி அமைச்சர் அந்த கூட்டத்தில் தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுனர்  இந்திரஜித் குமாரசுவாமி  தனக்கு எதிராக செயல்ப்டுமாறு உழியர்கள் மத்தியில் தெரிவித்து வருவதாகவும் நிதி மந்திரி அந்த கூட்டத்தில்  குற்றம் சுமத்தியதாகவும் தேரிவிக்கப் பட்டுள்ளது.

Related posts: