இலங்கை கடலில் எரிபொருள் ஆய்வு மேற்கொள்ள இரு நாடுகள் !

Tuesday, May 8th, 2018

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இலங்கை கடற்பகுதியில் எரிபொருள் உள்ளதா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள தயாராகி உள்ளன.

இதற்கான ஒப்பந்தங்களை இரு நாடுகளும் இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளன.

அதற்கமைவாக 50000 சதுர கிலோ மீற்றர் கடல் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள இரண்டு வருடங்கள் வரை செல்லும் எனவும்  இரண்டு நிறுவனங்களினாலும் 25 மில்லியன் டொலர்செலவிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைக் கடலில் எரிபொருள் வளம் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அதனை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவில்லை.

நாட்டின் வருடாந்த எரிபொருளுக்காக 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் செலவிடப்படுகின்றது.

மேலும் கடந்த வருடம் எரிபொருளுக்காக 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: