நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 1st, 2017

நாட்டின் தென்மேற்கு மாவட்டங்களில் மழையுடன் கூடியகாலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன்.

நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. சீரற்றகால நிலை தொடரும் பட்சத்தில் மக்கள் எதிர்கொள்ளக் கூடிய ஆபத்துக்களையும், அசௌகரியங்களையும் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைள் தொடர்பாகவும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக மறு அறிவித்தல்வரை குறிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென்றும் மக்களுக்குஎச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் இவ்வாறான எச்சரிக்கைகளை மீறி அனர்த்தம் நடந்த பகுதிகளுக்கு வேடிக்கைபார்க்கச் சென்றவர்கள் பலர் உயிரிழந்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பு - இலங்கைக்கான கட்டார் தூதுவர்...
யாழில் மீண்டும் கொரோனா அபாயம் - தென்மராட்சியில் 16 நாள்களில் 04 மரணங்கள்; 118 பேர் பாதிப்பு – செவ்வா...
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் - அமைச்சர் ...