பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன அறைகூவல்!

Saturday, October 8th, 2022

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் இணைந்து கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வது அவசியம் என அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி நிலைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாமல் தீர்வு காண முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலை, உலக ரீதியிலான நிலைமைகளை கவனத்திற் கொண்டு தனிப்பட்ட அரசியலை விடுத்து கொள்கை ரீதியான தீர்மானமொன்றை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் சபையில் தெரிவித்துள்ளார்..

அரசியல் ரீதியாக எத்தகைய கருத்துக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதும் அனைத்து அரசாங்கங்களும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றே வந்துள்ளன என்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர், அதுவே இப்போதைக்கு பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய விசேட உரை மீதான நேற்றைய இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்: அரசியல் நோக்கங்களுக்காக சபையில் ஆத்திரமூட்டும் உரைகளை ஆற்ற முடியும். எனினும் உண்மை நிலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட அரசியலை விடுத்து உலக நிலைமையை கவனத்திற் கொண்டு கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை இணைந்து மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் முதலில் பாரதூரமான நெருக்கடி நிலையை நாடாளுமன்றம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தென்மேற்கு பருவப் பெயர்ச்சி : கடும் காற்றுடன் கடல் கொந்தளிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
தேவையற்ற திறமையற்ற பணியாளர்கள் - அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள், - பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்த...
எந்தவொரு ஊடக நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்யும் சட்டத்தில் தலையிடப் போவதில்லை - ...