தேவையற்ற திறமையற்ற பணியாளர்கள் – அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள், – பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்க இவையே காரணம் என துறைசார் அமைச்சர் சுட்டிக்காட்டு!

Saturday, August 6th, 2022

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏன் நட்டத்தை சந்திக்கிறது என்பதற்கான 8 காரணங்களை தெரிவித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக மானிய விலையில் பொருட்களை விற்பனை செய்வதும் ஒரு காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து அறவிடப்படும் தொகை 300 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும், இலங்கை மின்சார சபையில் இருந்து அறவிடப்படும் தொகை 60 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

நிதி நிலைமை, அதிக கடன், கப்பல் நிறுவனங்களுக்கான தாமதக் கட்டணம் மற்றும் வங்கி வட்டி போன்ற காரணங்களும் காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையற்ற பணியாளர்கள், திறமையற்ற மற்றும் தேவையில்லாமல் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள், 2012 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட 25% ஊதிய உயர்வு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்காமை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை நம்பியிருப்பது மற்றும் அதிக விநியோக செலவுகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அண்மைய நாட்களில் எரிபொருட்துறை அமைச்சரைத் திட்டாத இலங்கையர்கள் யாரும் இருந்திருக்கமுடியாது. ஆனால் இப்போது பெற்றோல் பதுக்கல்காரர்களைத் தவிர அனைவரும் அவரைப் பாராட்டும் நிலை உருவாகியுள்ளது

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட சீரான எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதுடன் இலத்திரனியல் முறைமைக்கு எரிபொருள் வழங்கலை மாற்றியமைத்து ஒரே வாரத்தில் எரிபொருளுக்கான வரிசைகளை கணிசமான அளவுக்கு நாட்டில் குறைத்துள்ளார்.

முன்னரும் கூட இப்போது வழங்கப்படும் அளவுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்ட போதிலும் பதுக்கல் மற்றும் ஊழல் காரணமாக அனைவருக்கும் பங்கீடு செய்வதில் கடுமையான நெருக்கடிகள் இருந்தன.

ஆனால் இப்போது அனைவருக்கும் ஓரளவுக்கு எரிபொருள் கிடைக்கக் காரணம் இந்த இலத்திரனியல் (QR கோட்)முறைமைதான்.

ஓரளவுக்கு வெற்றியளித்துள்ள இந்த முறைமையில் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவைச் சற்று அதிகரித்து, இன்னும் சில வசதிகளை மேம்படுத்தினால் இது மிகவும் வெற்றிகரமான முறைமை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: