நாடாளுமன்றைக் கலைக்க கோரி விரைவில் பிரேரணை?

Thursday, April 19th, 2018

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்தைக் கோரும் பாரிய போராட்டமொன்றை கூட்டு எதிரணி விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் கூட்டாட்சியை தொடர்ந்து நீடிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் புதியதொரு அரசாங்கத்தையே மக்கள் விரும்புவதாகவும் இந்நிலையில் பொதுத் தேர்தலை நடத்தும் படி கோரி மக்களுடன் இணைந்து பாரிய போராட்ட நடவடிக்கையை கூட்டு எதிரணி விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக அரசாங்கத்துடன் இணைந்துள்ள கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அவர்களின் ஆதரவைக் கோரியுள்ளதுடன் நாடாளுமன்றத்திலும் அதற்கான பிரேரணையொன்றை சமர்ப்பிப்பதற்கும் அவர்களின் ஆதரவைக் கோரியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்தும்படி அரசாங்கத்தைக் கோரும் போராட்டத்தைக் கூட்டு எதிரணி நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்கள் ஆதரவுடன் நாடாளுமன்றத்துக்குள்ளே ஏனைய கட்சிகளின் ஆதரவுடனும் விரைவில் மேற்கொள்ளும் எனவும் இதற்கான நடவடிக்கைகளை கூட்டு எதிரணி ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


வரலாற்று பிரசித்திபெற்ற சந்நிதி முருகன் திருவிழாவில் அன்னதானம் - காவடிக்கு முற்றாகத் தடை - சுகாதார ம...
சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்...
தூதரகங்களின் ஆதரவுடன் இலங்கை அபிவிருத்தி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு தகுதியான முதலீட்டாளர்களை ஊ...