ஊரடங்கு இல்லாத பகுதிகளுக்கும் இறுக்கமடையும் நடைமுறைகள் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, November 3rd, 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் இடம்பெறும் திருமணங்கள் மற்றும் மரண சடங்குகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்டுத்தப்படாத பிரதேசங்களில் செயற்பாடுகளை மட்டுப்படுத்த வேண்டிய முறை தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழி காட்டி அமைப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த பிரதேசங்களில் திருமண நிகழ் வுகளில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மரண வீட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை 25ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஆலயங்கள், விகாரைகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பங்குகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக பட்சம் 25ஆகக் காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆலயங்கள், விகாரைகள், தேவாலயங் கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொது மக்கள் ஒன்று கூடும் செயற்பாடுகள் அல்லது கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அந்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: