நல்லாட்சி என்றோர் ஜனநாயகத்தை இல்லாது செய்துள்ளனர் – நாமல் குற்றச்சாட்டு!

Tuesday, January 15th, 2019

நல்லாட்சியை நிலைநாட்டுவோம் என்று வந்தவர்கள், நாட்டில் ஜனநாயகத்தையே இல்லாது செய்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைப்புச் செய்து மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளோம். இந்தப் பணியை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். இந்தப் பகுதி மட்டுமன்றி ஏனைய பகுதிகளுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பாரத்துள்ளோம் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இதற்கான வேலைகளை மேற்கொள்ள முடியும். ஆனால் அவர் இதனை நிறைவேற்றவில்லை. தற்போது அரசமைப்பு என அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள். இதனை அரசாங்கத்தில் உள்ளவர்களே எதிர்த்துள்ளார்கள்.

எனவே அரசமைப்பும் பொய்யான ஒரு செயற்பாடாகும். நாட்டில் இன்று ஊடக சுதந்திரம் என்பது இல்லாது போயுள்ளது. ஊழல், இலஞ்சம் என்பன அதிகரித்துள்ளது. இவ்வாறானவர்கள் தான் அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.

நல்லாட்சியை நிலைநாட்டுவோம் என்று வந்தவர்கள், ஜனநாயகத்தையே இல்லாது செய்துள்ளார்கள். இதுதான் இவர்களின் நல்லாட்சியாகும்.

2009 ஆம் ஆண்டு நான் கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு வந்துள்ளேன். அன்று பார்த்ததைவிட இன்று அபிவிருத்திகள் அனைத்தும் கடந்த 4 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

வடக்கு  மக்கள் மட்டுமன்றி தெற்கில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே உடனடியாகப் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் நாம் வலியுறுத்துகின்றோம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts: