தேர்தல் விதி மீறல்களை காணொலி மூலமும் இனி முறையிடலாம்!

Friday, January 26th, 2018

உள்ளுராட்சித் தேர்தலின்போது இடம்பெறுகின்ற தேர்தல் விதி மீறல்களைக் காணொலியாகப் பதிவு செய்து பொதுமக்கள் அனுப்பி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைக் கூறினார். தேர்தல் விதி மீறல்கள் குறித்துப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. வீடு வீடாகப் பரப்புரைக்குச் செல்லும் போது 12 பேர் சென்றால், அது சட்டத்துக்குப் புறம்பான கூட்டமாகவே கருதப்படும். அவ்வாறு செல்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்தால் காணொலியூடாக அந்த முறைப்பாடுகளை மேற்கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related posts: