மண்டைதீவு பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது!
Thursday, January 11th, 2024
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவகப் பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார், கடற்படை, இராணுவம் என்பன கூட்டாக இணைந்து மண்டைதீவு பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மினுவங்கொட கொத்தணியிலிருந்து மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அரச தகவல் திணைக்களம்!
புதிய கட்டண முறையின் காரணமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட 400 நிரப்பு நிலையங்கள் - பெற்றோல் நிரப்பு நி...
50 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை ...
|
|
|


