தேர்தல் ஆணைக்குழு அனுமதியுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம்!
Tuesday, January 9th, 2018
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி. முனசிங்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்க ஆகியோரே இடமாற்றப்பட்டுள்ளனர்.
விசேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பீ. முனசிங்க, சப்ரகமுவ மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் தகவல் தொழில் நுட்ப பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்க விசேட பாதுகாப்பு பிரிவுக்கும் இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளனர்.
தேர்தல் காலங்களில் இட மாற்றங்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியையடுத்து இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
எண்ணை தொட்டிகள் விற்பனை ராஜபக்சவை சாடுகிறார் சம்பிக்க
ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் – வெளியானது அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு !
உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிப்பு - உலக சுகாதார ஸ்தாபனம் தெரி...
|
|
|


