உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!

Sunday, March 17th, 2024

உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 80 சதவீதம் பேர் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நரம்பியல் நிலைகளால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை 1990 முதல் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீரிழிவு நோய் தொடர்பான நரம்பியல் நோய்கள், மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: