5 ஆண்டுகளுக்குப் பின்னர் கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட 26 மாலுமிகள்!

Tuesday, October 25th, 2016

ஐந்தாண்டுகளாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட ஆசிய மாலுமிகள் குழுவை சேர்ந்த சிலரை சோமாலி கடற்கொள்ளையர்கள் விடுவித்ததை தொடர்ந்து தாங்கள் சந்தித்த கடும் சோதனைகள் குறித்து தெரிவித்ததுள்ளனர்.

26 பேர்களில் ஒருவரான பிலிப்பைன்ஸை சேர்ந்த அர்நெல் பால்பெரோ, பணயக்கைதிகள் விலங்குகளைவிட மிகக் கேவலமாக நடத்தப்பட்டதாகவும், உணவுக்காக எலிகளை வேட்டையாட வேண்டியிருந்ததாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று, கென்ய தலைநகர் நைரோபியில், விடுவிக்கப்பட்ட கடல் மாலுமிகளை தூதரக அதிகாரிகள் வரவேற்ற போது பல உணர்ச்சிமிக்க காட்சிகள் அங்கு நடந்தேறின. சீனா, தைவான், வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனீஷியாவில் உள்ள தங்களது சொந்த வீடுகளுக்கு இந்த மாலுமிகள் செல்ல உள்ளனர். 2012 ஆம் ஆண்டு செஷல்ஸுக்கு அப்பால் மீன்பிடி படகில் இருந்த போது இந்த மாலுமிகள் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டனர்.

_92064178_65cca054-f2fa-4f1e-9c31-d4831a523021

Related posts: