எண்ணை  தொட்டிகள் விற்பனை ராஜபக்சவை சாடுகிறார் சம்பிக்க

Sunday, May 7th, 2017

திருகோணமலை எண்ணெய் தொட்டிகள் விற்பனைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியன் ஓயில் கோர்ப்பரேஷன் (I.O.C.) நிறுவனத்துடன் 2013 ம் ஆண்டே இரகசிய உடன் படிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தார் என பெருநகரங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியாவின் தி ஹிந்து பத்திரிகையில் 25 மே 2013 இல் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி  நேற்று இந்த தகவலை வெளியிட்ட  ரணவக்க , “ஐ.ஓ.சி.இடம் திருகோண மலையில் உள்ள டிரான்ஸ்கோ எண்ணெய் டாங்கிகளின் உரிமையைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்த ராஜபக்ச  தற்போதைய அரசு அவற்றை விற்க முயல்வதாகக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்  என ராஜபக்சவை சாடினார்.

 2013ம் ஆண்டு  மே மாதம் அன்றைய திறை சேரியின் செயலாளர் டாக்டர் பி.பீ. ஜயசுந்தர. மஹிந்த ராஜபக்சவின் இந்தத் திட்டம் தொடர்பில் பேச்சு வார்த்தை நடா த்த  இந்திய பெட்ரோலியச்  செயலாளரை சந்தித்திருந்தார்  எனவும் ரணவக்க தெரிவித்தார்.

இந்த பேச்சு வார்த்தையின் போது இந்தியன் ஓயில் கோர்ப்பரேஷன் (I.O.C.) நிறுவனத்துக்கு திரிகோணாமலை எண்ணை தொட்டிகளை  எடுத்துக் கொள்ள ஆர்வம் இருந்தால்,மஹிந்த ராஜபக்சவின் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும் என   ஜயசுந்தர IOC செயலாளரிடம் கோரிக்கை வைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

IOC மற்றும் இலங்கை பெட்ரோலியம் கூட்டுஸ்தாபனதிற்கும் இடையில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் பல்வேறு திட்டங்களை  மேற்கொள்வதற்கான கூட்டு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக  25 May 2013 இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தததையும்  சம்பிக்க ரணவக்க சுட்டிக் காட்டினார்.

திருகோண மலை டிரான்ஸ்கோ எண்ணெய் டாங்கிகளை ஐஓசிக்கு விற்பனை செய்ய முயற்சித்த  ராஜபக்ஷ அதே டாங்கிகளை தற்போதைய அரசு இந்தியாவிற்கு விற்கப் போவதாக தெரிவித்து  அரசாங்கத்திற்கு பந்தை அனுப்பாமல்  2013 ல் ஐ.ஓ.சி.க்கு அவர் வழங்கிய “மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப் படுத்த வேண்டும் எனவும்  ரணவக்க தெரிவித்தார்.

Related posts: