பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்திமுடிப்போம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, July 13th, 2020

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதுக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர்  தொடர்ந்தும் தெரிவிக்கையில் –

எங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த அரசாங்கம் இரண்டு வருடங்களாக மாகாண சபை தேர்தலை பிற்போட்டது. மாகாண சபை தேர்தலை பிற்போட்டு விட்டு முடிந்த விடயங்களை செய்தார்கள்.  நாட்டில் நல்ல நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்த நேரிட்டது. நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றோம். இந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொண்டு பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: