யாழ்.நகரப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுகளால் பண்ணைக் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் – ஈ.பி.டிபியின் யாழ் மாநகர உறுப்பினர் அனுஷியா!

Saturday, June 23rd, 2018

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து அகற்றப்படும் கழிவுகள் மற்றும் இதர வகையில் யாழ் நகரப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் யாழ் நகரை அண்டிய கால்வாய்களில் கலக்கப்படுவதால் யாழ்.மாநகரப் பகுதியில் சுகாதார சீரின்மை உருவாக்கப்படுகின்றது என்பதுடன் குறித்த கால்வாய் ஊடக செல்லும் கழிவு நீர் யாழ்.பண்ணைக் கடலில் கலப்பதனால் கடலுயிரினங்கள் பாதிக்கப்டுகின்றது  என மக்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து குறித்த சுகாதார சீர்கேடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க யாழ் மாநகரசபை நடவடிக்கை ஏதும் இதுவரை மேற்கொண்டுள்ளதா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுஷியா சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் ஆர்னோல் தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளின் சுகாதார சீர்கேடுகள் மற்றும் சீரழிவுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

யாழ் போதனா வைத்தியசாலையின் கழிவுகள் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வாய்க்கால்களில் கலக்கவிடப்படுவதாகவும் அதனால் குறித்த கழிவுகள் யாழ் பண்ணைக் கடலில் சென்று சங்கமிப்பதாகவும் மக்களால் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கழிவுகள் கடல் நீரில் கலப்பதால் கடல் மாசடைவதுடன் அங்கு வாழும் மீன்களும் சுகாதாரமற்ற பொருட்களை உண்ணும் நிலை உருவாகுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பிடிக்கப்படும் மீன்கள் தொடர்பிலும் மக்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மக்களின் உணர்வுகளுக்கேற்ப குறித்த சுகாதார சீரழிவுகளை தடுப்பது அல்லது ஆராய்வது தொடர்பில் யாழ் மாநகரசபையின் சுகாதார பிரிவு என்ன நடவடிக்கை இதுவரை மேற்கொண்டுள்ளது என்பது தொடர்பில் ஒரு தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. எனவே குறித்த பிரச்சினையின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு சுகாதார சீர்கேடுகள் தொடராதிருப்பதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

bandicam 2018-06-23 11-46-09-843

Related posts:


அடுத்த வருடம் புதிய 10 ஆயிரம் புதிய தொழில்வாய்ப்புக்கள் நாட்டிற்குக் கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர்...
பெற்றோல் இறக்குமதிக்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு – அனுமதி கொடுத்தது அமைச்சரவை!
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி - தமிழக முதல்வருக்கு இந்நிய வெளியுறவ...