பெற்றோல் இறக்குமதிக்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு – அனுமதி கொடுத்தது அமைச்சரவை!

Tuesday, March 1st, 2022

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 8 மாதங்களுக்கு 1.8 மில்லியன் பெறுமதியான பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பான யோசனையை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி, ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதனிடையே

தற்போதைய நிலைமை காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விடுவிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித் துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை மாத்திரமே சந்தைக்கு வெளியிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் அனைவருக்கும் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என்பதால் எரிபொருளை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் காரணமாக அந்நியச் செலாவணி செலவினங்களில் அத்தியாவசியப் பொருட்க ளுக்கு முன்னுரிமை அளிக்கவும் அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள பல பெற்றோல் நிலையங்கள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அரசாங்க வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருளை வழங்கும் திட்டத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளன. பெற்றோல் நிலையங்களிலும் இதற்கான விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று இலங்கைக்கு வரவிருந்த டீசல் கப்பல் தவிர்க்க முடியாத காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ‘திவயின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: