தேர்தலை நடத்தாதிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது – தேர்தல் ஆணைக்குழு தலைவர்!

Monday, June 25th, 2018

தேர்தலில் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதன் மூலமாக மட்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டமுடியாது. மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் கலந்துரையாடிமக்களின் கருத்துக்களை பெற்று செயற்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சாய்ந்தமருதில் வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஜனநாயகம் என்பது வாக்குரிமையில் தங்கியுள்ளது. அதேபோன்று நாட்டின் இறைமையும், அரசியல் யாப்பின்படி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதும் வாக்குரிமையிலதான் தங்கியுள்ளது.

நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளைகொண்ட பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகிறது. இவை அனைத்துக்கும் மக்கள்  வாக்களிக்கவேண்டும். எனவே இந்த அதிகாரம் மக்களுக்குரியது என்றார்.

வாக்களிக்கும் உரிமையுள்ளஅனைவரும் உங்கள் பெயர்களைவாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதுமட்டும் போதாது. வாக்களிக்கவும் வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை உள்ளது.  இதில் மதம், இனம், குலம், ஆண், பெண் என எந்தபாகுபாடும் காட்டுவதில்லை என குறிப்பிட்ட ஆணைக்குழு தலைவர் ஒரு தேர்தலை நடத்தாதிருப்பது அல்லது ஒத்திப் போடுவதும் ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும் என்றார்.

Related posts:

எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் இறக்குமதி கிடையாது - அமைச்சர் பந்துல குணவர்த்தன திட்டவட்டம்!
மருந்துகள் கொள்வனவுக்காக மேலதிகமாக 100 மில்லியன் டொலர் - அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர...
வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு - எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாமல் போயுள்ளது - சுங்கத்திணை...