பூமி நோக்கி வருகிறது பேரழிவு ஏற்படுத்தவல்ல இராட்சத கோள்!

Saturday, July 6th, 2019

பூமியை நோக்கி இராட்சச சிறுகோள் ஒன்று 2,700 மெகா டொன் அழிவு சக்தியுடன் வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த இராட்சச சிறுகோளிற்கு Asteroid FT3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இந்த சிறுகோள் சுமார் 1,115 அடி மற்றும் 340 மீ விட்டம் கொண்ட பாறையினால் ஆனது என்று நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா கணித்துள்ள கணிப்பின் படி 2019 ஆண்டு முதல் 2116 ஆம் ஆண்டு வரை சுமார் 165 சிறுகோள் தாக்குதலைப் பூமி சந்திக்க போகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.

Asteroid FT3 என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி பூமியை நோக்கி அல்லது பூமியைத் தாண்டி செல்லும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளது போல, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் கடந்து சென்றால் பூமிக்கு ஏற்படும் பேரழிவு மற்றும் ஆபத்து குறைவானது.

எனினும், இச்சிறுகோள் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் பாதையில் மாற்றம் ஏற்பட்டுபூமிக்கு நேராக வந்தால், முடிவுகள் பேரழிவு தரும் என்பதில் சந்தேகமில்லை என்று நாசா கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: