தேரரை கைது செய்தால் பாரிய பின் விளைவுகள்  அரசாங்கத்தை எச்சரிக்கிறது பொது  பல சேனா

Tuesday, May 23rd, 2017

சிங்களத் தீவிரவாத அமைப்பான பொது  பல சேனா குருனகலப் பகுதியில் உள்ள சில இசுலாமியர்களின் கடைகள் மற்றும் மசூதியை அடித்து நொருக்கியுள்ளது .

மதக் கலவரத்தையும் அமைதியையும்  சீர்குலைத்து வரும்  பொது பல சேனா, இஸ்லாமியர்கள் தங்களின் புனித மாதமான ரம்ஜானுக்கு தயாராகி வரும் வேளையில் அவர்களுக்கு சொந்தமான கடைகள்,மசூதி ஆகியவற்றை  ஞாயிற்றுக் கிழமை இரவு  தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கையின் முன்னணி தேசிய ஊடகங்கள்கூட செய்தி வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வருவது பெரும் கவலை அழிப்பதாக. இஸ்லாமிய அமைப்புக்கள் தேர்விதுள்ளன, .

இதுதொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் அத்துல் கெஷாப் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ எவர் ஒருவரின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டாலும் அது கண்டித்தக்கது. இந்த வாரத்தில் நடைபெற்ற மூன்றாவது சம்பவம்’ இது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில் தொடர்புள்ள கலகக்காரர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தக் கலவரம் தொடர்பாக பொது  பல சேனவின்  பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரரை வினை கைது செய்யும் முயற்சியில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டபோது . அவரது தொண்டர்கள் அவரை கைது செய்யமுடியாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் தங்களின் எதிர்ப்பை மீறி ஞான சார தேரர்   கைது செய்யப்பட்டால் பெரும் பின் விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டும் எனவும் பொதுபல சேன அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

Related posts:


அதி ஆபத்து வலையங்களில் பேருந்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க அரச பேருந்து சபை முடிவு – போக்குவரத்து சே...
மேற்கு முனைய அபிவிருத்தித் திட்ட விவகாரம் - சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டது உடன்படி...
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை அதிகரியுங்கள் – உள்ளூர் உற்பத்தியாளர்கள் கோரிக்க...