தாஜீதினின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிப்பு!
Tuesday, July 4th, 2017
வசிம் தாஜீனின் உடற் பாகங்கள் காணமல் போன சம்பவத்திற்கு கொழும்பு மாவட்ட முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேனா பதவி விலகுவதற்கு முன்னர் வசீம் தாஜீதினின் உடற் பாகங்கள் காணாமல்போன சம்வம் தொடர்பான விசாரணை அறிக்கைக்கு கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாரேஹன்பிட்டியில் வசீம் தாஜீதினின் கொலை இடம்பெற்ற பின்னர் அவரது உடலை சட்ட வவ்ததிய அதிகாரி ஆனந்த சமரசேகர உடற்கூற்று பரிசோதனைக்குட்படுத்தி இந்தச் சம்பவம் விபத்து என அறிக்கையிட்டிருந்தார். இதனையடுத்து மருத்துவர் அஜித் தென்னக்கொன் தலைமையிலான சிறப்பு நிபுணர் குழு வழங்கிய அறிக்கையில் வசீம் தாஜீதினின் மரணம் கொலை என நிரூபிக்கப்பட்டு;ளது.
சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக நியமிக்கப்பட்ட ஆனந்த சமரசேகர, வசீம் தாஜீதின் உடற்பாகங்களை சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்க கொணடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அவர் குறித்து விசாணைகள் ஆரம்பிக்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்க கார்லோ பொன்சேகா இறுதி அனுமதியைப் பெற்றுக் கொடத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|
|


