சைற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு!

சர்ச்சைக்குரிய சையிற்றம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி அறிவிப்பார் என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் நாடாளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசாங்கம் பல தடவைகள் உரிய தலைப்புக்களுடன்பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சையிற்றம் நிறுவனத்தை மூடுவது தவிர வேறு எந்த நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாட அரசாங்கம் தயார் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறினார்.
சைற்றம் பிரச்சினையை தீர்ப்பதற்காக மூன்று பீடங்களின் மகாநாயக்கர்களின் ஆலோசனைகளை கௌரவத்துடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் இதற்கமைவாக அரச அதிகாரிகளின் சங்கமும் மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்கு நேர்மையுடன் செயற்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
|
|