மணிலாவில் விடுதியொன்றில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் – 34 பேர் பலி

Friday, June 2nd, 2017

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள விடுதி மற்றும் சூதாட்ட ரெசார்ட் ஒன்றில் .எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து ரெசார்ட்ஸ் வேர்ல்ட் மணிலா தற்காலிகமாக மூடப்படுவதாக அந்த நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது

தாக்குதலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், குறிப்பிட்ட விடுதிக்கு சீல் வைத்ததுடன் அந்த பகுதிக்கு தடை விதித்துள்ளனர்.மேலும் அந்த விடுதியில் இருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சைட் புலனாய்வு குழுவின் தகவலின்படி, .எஸ் தீவிரவாத அமைப்பின் லோன்வோல்ஃப் படையினர் இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது..எஸ். தீவிரவாதிகள் மறைந்து இருந்து தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் இதுவரை 34 பேர் பலியாகியுள்ளதுடன் , காயம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் கிடைக்கவில்லை.

Related posts:


சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ள பாதாள உலகக் குழு இல்லாதொழிக்கப்படும் - பசில் ராஜபக்ச உறு...
அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் இறக்குமதி செய்யப்படும் - வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரிக்கை!
எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய - இலங்கை கடற்படை தளபதிகளுக்கு இடையில் விசேட பேச்சு!