சிவில் கைதிகளுக்கு சிறப்பு சலுகை – பணம் செலுத்துவதன் மூலம் சிறைச்சாலைகளில் சிறப்பு தங்குமிடங்களைப் பெறுவதற்கும் நடவடிக்கை!

Wednesday, October 26th, 2022

சிவில் கைதிகளுக்கு பணம் செலுத்துவதன் மூலம் சிறைச்சாலைகளில் சிறப்பு தங்குமிடங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் புதிய ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது என்று முன்னிலை சோசலிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

2022, ஜூலை 12 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை, இதற்காக முன்னிலை சோசலிஸக் கட்சி மேற்கோள் காட்டியுள்ளது.

அதில், அதிகாரி நிர்ணயித்த கட்டணத்தைச் செலுத்தினால், எந்தவொரு சிவில் கைதியும் ஒரு அறையின் பிரத்தியேகமாக பெறலாம்.

அத்துடன் தனது செலவில் தளபாடங்களையும் பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில், தண்டனை வழங்கப்படாத அல்லது சிவில் கைதிகள் சிறைச்சாலையில் தமது உடனடி குடும்பத்தினர் மூன்று பேர் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்களை வாரந்தோறும் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியும் என்று முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்திப்பு நேரத்தை பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கவும் முடியும். தண்டனை விதிக்கப்படாத கைதியோ அல்லது சிவில் கைதியோ ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த ஒருவரையும் சந்திக்க முடியாது.

அதேநேரம் கைதிகளுக்காக, அறைகளுக்கு வெளியே உடற்பயிற்சியின் நோக்கத்திற்காக ஒவ்வொரு நாளும் பகலில் ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: